நியூமராலஜி வேலை செய்கிறது.....
காலை தினசரியை புரட்டிகொண்டிருந்த தனுஷ்...அந்த விளம்பரத்தை பார்த்தான்..."ஆசியாவிலேய முதல் பெயரியல் நிபுணர் விஜயம்....உங்கள் பெயர் மூலம் அதிர்ஷ்டத்தை அடையுங்கள்......"தனுஷுக்கு நியூமராலஜி மேல் நம்பிக்கை இல்லை , இது போன்ற நம்பிக்கையை பயன்படுத்தும் அவனது நண்பர்களை கிண்டல் செய்வது அவனது வாடிக்கை.ஆனாலும் அன்று அந்த விளம்பரத்தை பார்த்ததும் அவனக்கு ஓர் ஆவல். தொலைக்காட்சியில் வரும் அந்த நபர் நமது நகரத்திற்கு வருகிறார் ஒரு முறை சென்று பார்ப்போம் என எண்ணினான்.தொலை பேசியில் அனுமதி வாங்கி அவரை சென்று சந்தித்தான். பிறந்த தேதி மற்றும் பெயரை வாங்கி எண்களை கொண்டு கூட்டி கடைசியில் ஒரு முடிவாக பேச ஆரம்பித்தார் பெயரியல் நிபுணர்..."தனுஷ் அவர்களே உங்கள் வாழக்கையில் 5 ஆம் எண் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. உங்கள் வாழ்க்கை முழுவதுமே 5 ஆம் எண் ஆதிக்கம் இருக்கிறது. உங்கள் பெயரும் 5 ஆம் எண் தான். எனவே ஐந்தாம் எண்ணை நன்றாக பயன்படுத்துங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டம் வரும்.."தனுஷால் அவரின் கருத்தை நம்ப முடியவில்லை... அவர் கேட்ட பிரகாரம் ஐயாயிரம் ரூபாயை கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்தான்.தனது பைக்கை நிறுத்தும் பொழுதுதான் கவனித்தான் அவனது வாகன எண் 1445.மெல்ல நடந்து காலிங் பெல்லை அழுத்தும் பொழுதுகருப்பு வட்டத்தில் வெள்ளை நிறத்தில் எழுதபட்ட அவனது வீட்டின் எண் கண்களுக்கு பட்டது (32)அவனுக்கு ஏதோ புரிய துவங்கியது..தனது அனுபவத்தை மனைவியிடம் கூறினான் தனுஷ்.அவனை மையமாக பார்த்த அவனது மனைவி “அஞ்சு” அவனை பார்த்து...”எனக்கு உண்மையா இருக்கும் பொல இருக்குங்க நீங்க கூட நாலு பெண்ணை பார்த்த பிறகு தான் என்னை பெண் பார்த்து கல்யாணம் பண்ணிட்டீங்க. நியூமராலஜி பார்க்க கூட 5000 பீஸ் கொடுத்திருக்கீங்க. உங்களுக்கும் ஐந்தாம் எண்ணுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குங்க...:” என்றாள்.தனது நண்பன் பஞ்சாபகேசனுக்கு தொலைபேசியில் தனது ஐந்து எண்ணின் மகத்துவத்தை கூறினான் தனுஷ்.பஞ்சாபகேசன் உற்சாகமடைந்தான். ஐந்தாம் எண்ணை அதிர்ஷ்டமாக்கும் யோசனைகள் விவாதிக்கபட்டது..இருவரும் ஐந்தாம் எண்ணின் அதிர்ஷ்டத்தை சோதிக்க குதிரை பந்தையத்திற்கு போகலாம் என முடிவாயிற்று.தனது வங்கி இருப்பிலிருந்து ஐந்தாம் எண்ணின் சக்தி கொண்ட 50,000 ரூபாயை எடுத்து கொண்டு குதிரை பந்தைய மைதானத்திற்கு இருவரும் சென்றனர்..எந்த குதிரை மேல் பணம் கட்டுவது என்று குதிரையின் பெயர் பட்டியலில் சோதனை செய்தனர்..”ஃபைவ் ஸ்டார் பிளாக்கி“ என்ற பெயர் அவர்களின் ஐந்தாம் எண்ணுக்கு ஏற்ப அமைந்திருந்தது.தனது கைகளில் இருந்த ஐம்பதாயிரம் ரூபாய் முழுவதும் அந்த குதிரை மேல் காட்டினான் தனுஷ்.பந்தையம் ஆரம்பித்தது... இருவரும் உற்சாகமானார்கள். தனுஷின் முன் பண மழை பொழியும் கனவுகள் வந்து போயின...பந்தைய முடிவு அறிவிக்கப்பட்டது...ஃபைவ் ஸ்டார் பிளாக்கி எனும் குதிரை ஐந்தாவதாக வந்திருந்தது.
உங்கள் வீட்டின் சமயலறையில் இருக்கும் உப்பு டப்பவிற்கு சர்க்கரை என பெயர்மாற்றினால் கப்பியில் கலக்கி குடிப்பீர்களா ?அது போல தான் உங்கள் உளநிலையை மாற்ற பெயர் தேவை இல்லை.பெயரைமாற்றினால் உள்நிலை மாறது.
Wednesday, November 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment