எனது ஆசிரியருக்காய் எழுதப்பட்ட இக்கவிதை மலர்ந்தது 10/7/2007 அன்று.
அறிவு பசி தீர்க்க
ஆசிரியராக வந்தீர்!
வாழ்க்கையின் பாடத்தை
வகையுடனே போதித்தீர்!
தெய்வம்போன்ற எங்கள் குரு
இறையருளை பெற்றிடவே
தூய மனதுடனே
தூயவனை துதிக்கின்றோம்
அறிய பருவத்தில்
பிழைகள் பல செய்திருந்தும்
அத்துனையும் பொறுமையென்னும்
பெறுந்தவத்தால் பொறுத்தீரே
எதிர்பார்ப்பு இல்லையென்றால்
ஏமாற்றம் வருவதில்லை
என்றெல்லாம் சத்தியத்தை
எளிமையாய் விதைத்தீரே!
உங்களரு ளாலன்றோ!
சமுதாயம் எமைப்போற்ற
செல்வ வளத்தோடு
சீருடனே வாழ்கின்றோம்
எங்கள் தவறுகளால்
உம்மை துன்புறுத்தி
இன்பம் கண்ட பாவம்
என்று விடுபடுமோ!
அன்போடு இருப்பவரே
உரிமையோடு தண்டிப்பார்!
என்றென்னும் சிந்தையன்று
தெரியாமல்(தொன்றாமல்) போயிற்றே!
தவறுகள் செய்துவிடில்
வெளிப்படையாய் தண்டிப்பீர்
வெறுப்பினால் தண்டித்தீர்
என்றன்றோ எண்ணிவிட்டோம்!
நினைவுடனும் கனவுடனும்
நகைச்சுவை உணர்வுடனும்
பள்ளி பருவத்தில்
பட்டாம் பூச்சியானோம் !
பள்ளி வாழ்வின்னும்
ஓரிரண்டு திங்களென்று
நீர்தளும்ப கூறினீரே
உமதருமை அன்றுணர்ந்தோம்!
மதிய இடைவேளியில்
மரங்களின் நிழல் மடியில்
கதை பேசி மகிழ்வோமே!
அந்நாள் மீண்டும் திரும்பதோ!
உணவுன்னும் நேரத்தில்
பலவீட்டு சுவைகண்டோம்
வகை வகையாய் சுவைத்தோமே
அந்நாள் மீண்டும் திரும்பாதோ
சினிமா படங்களையே
நிஜமென்று எண்ணிவிட்டு
சில்மிஷம் செய்து நாங்கள்
மாட்டிக்கொண்ட நாளினிது
விளையாட்டு நேரத்தில்
பல்வகை காய்கொண்டு
கூட்டாஞ்சோறு செய்து
கூத்தடித்த நாள் இனிது
இதயம் கணமாக
கண்களில் நீர் ஆறாக
கற்று கொடுத்தோரை
பிரிந்து செல்கின்றோம்
ஏணியாய் ஏற்றிவிட்டும்
ஏற்றிக்கொண்டும் இருப்போரே!
உங்களை இப்பார் போற்றும்
வழிநடப்போம் நம்பிடுவீர்!
மன்னிப்பு பிரார்தனைகள்
நம்பிக்கை உற்சாகம்
இவைகளால் எமைவிதைத்தீர்
(நல்)விருட்சமாய் பலன்கொடுப்போம்!
Thursday, November 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment