கிருச்ண ஜெயந்தி 2009 அன்று ,முசோரி ராதா கிருச்ணா கோவிலில் வைத்து எழுதிய கவிதை,,,
அடுத்து நடப்பது
ஆண்டவன் வகுப்பது
தடுத்து நிறுத்துதல்
தெய்வ குற்றமாம்!
இறைவன் அறிவான்
இனியவை அருள்வான்
எச்செயல் நடப்பினும்
அவன் செயல் என்றுணர் !
துன்பம் என்பது
எதிர்கால இன்பமாம்
துன்பத்தின் விதைகளில்
கண்ணிர் துளிகளில்
எதிர்கால இன்பத்தின்
விருட்சங்கள் துளிர்விடும்!
துன்பம் வந்திடில்
துணிவுடன் எதிர்கொள்
கண்மூடி தியானித்தால்
கரைந்துவிடும் காற்றலையில்!
மனதை மேம்படுத்த
நாமஜெபம் சொல்லிடுவோம்
வாழ்வை வளமாக்க
வானரனை வணங்கிடுவோம்!
காலை கண்விழித்து
கடவுளுக்கு நன்றி சொல்வோம்
களங்கமில்லா குழந்தை போன்று
கணப்பொழுதில் வாழ்ந்திடுவோம்!
பொருள் கிடைக்கும்
அருள் கிடைக்கும்
எதிர்பார்ப்பு இல்லையென்றால்-ஆம்
எதிர்பார்ப்பு இல்லையென்றால்!
வேண்டுவோர்கு வேண்டியவை
வேண்டும் கணம் கிடைத்திடுமே!
வேண்டும் வரமெல்லாம்
பொதுநலமாய் அமைந்திட்டால்!
இறைவனுக்கு பயப்படுதல்
ஆன்மீகம் ஆகாது
ஆன்மீகம் என்பதெல்லாம்
ஆன்மாவை அறிவதுவே!
மனமது செம்மையாக
மந்திரம் ஜெபித்திடுவோம்
மூச்சுபயிற்சி செய்து
முறையுடனே வாழ்ந்திடுவோம்!
வாழ்ந்திடுவோம் வையகத்தில்
வாழ்வாங்கு வாழ்ந்திடுவோம்
பாரதப் பண்பாட்டை
பண்புடனே போற்றிடுவோம்!
வாழ்க பாரதம்! வாழ்க பாரதம்!
வாழிய வாழியவே!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
வாழிய வாழியவே !
A little lamp can do which the sun can not do- it gives light at night
No one is superior by size,but by purpose ! BERNAD SHAW
Showing posts with label கிருச்ண ஜெயந்தி 2009. Show all posts
Showing posts with label கிருச்ண ஜெயந்தி 2009. Show all posts
Wednesday, November 25, 2009
Subscribe to:
Posts (Atom)
