கந்தன் திருநீரணிந்தால்கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம்குடும்பத்தை நாடி வரும்
(கந்தன்)
சுந்தரவேல் அபிஷேகசுத்தத் திருநீரணிந்தால்
வந்தமர்ந்த மூத்தவளும்வழிபார்த்துப் போய்விடுவாள்
அந்த நேரம் பார்த்திருந்துஅன்னைசெல்வம் ஓடிவந்து
சிந்தையைக் குளிரவைத்துசொந்தம் கொண்டாடிடுவாள்
(கந்தன்)
மணம் மிகுந்த சாம்பலிலேமகிமை இருக்குதடா
மனமுடன் அணிவோர்க்குமகிழ்ச்சியைப் பெருக்குதடா
தினம்தினம் நெற்றியிலேதிருநீரு அணிந்திடடா
தீர்ந்திடும் துன்பம் எல்லாம்தெய்வம் துணை தாருமடா
(கந்தன்)
*******************************************
Showing posts with label தெய்வம் துணை. Show all posts
Showing posts with label தெய்வம் துணை. Show all posts
Wednesday, November 25, 2009
Subscribe to:
Posts (Atom)
